மிரட்டலாக வெளியான ‘தலைவர் 171’ டைட்டில்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

0
86

‘Thalaivar 171 Titile’: இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. வேட்டையன் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் யுனிவர்ஸில் இருந்து இந்த படம் சற்று மாறுபட்ட படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார்.

இந்தப் படம் போதைப்பொருளை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜின் கேரியரில் ஒரு வித்தியாசமான திரைப்படமாக இருக்கும்.

‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு எதிரான் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘தலைவர் 171’ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மாஸ் லுக்கில் இருக்கும் ரஜினியின் கையில் தங்க வாட்ச்களுடன் கட்டப்பட்டு கைது செய்யப்பட்டது போல இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஐமேக்ஸ் கேமரா ஷூட் மற்றும் குறிப்பிட்ட காட்சிகள் படப்பிடிப்பு குறித்து படக்குழு திட்டமிட்டு வருகிறது. மேலும், படத்தின் முன்தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்து வருகின்றன.

தொடர்ந்து, ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் ‘Eagle’, ‘Gold’, ‘RaaNaa’ என கூறப்பட்டு வந்தன. இதனால், படத்தின் டைட்டில் ஏப்ரல் 22ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ‘X’ தளத்தில் , “நாளை மாலை 6 மணி முதல் D.I.S.C.O” என குறிப்பிட்டார். இதனைப் பார்த்த ரசிகர்கள் D.I.S.C.O-வுக்கு என்ன அர்த்தம் என்பது தெரியாமல் குழப்பமடைந்தனர்.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 22) மாலை 6 மணிக்கு ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு ‘கூலி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த போஸ்டரை படக்குழு வெளியிட்ட நிலையில் தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here